Update : ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2020 15:58
ரஞ்சனின் குரல் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை இன்று நீதிமன்றத்திற்கு..

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் குரல் பரிசோதனை குறித்த பகுப்பாய்வு அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க இன்று பிற்பகல் வேளையில் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குரல்பதிவு சம்மந்தமாக ரஞ்சன் ராமநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்குவது தொடர்பாகவும் இன்று கருத்திற் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினராக அவருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் படுகொலையொன்றை புரிவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா என்பது குறித்தும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரபரப்பை ஏற்படுத்திய குரல் பதிவு சம்பந்தமான கொழும்புகுற்றப்புலனாய்வு பிரிவுதொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 
ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2020 15:58