இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிரேம் எடைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாணின் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட அரச தரப்பினர் பங்கேற்றனர். இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் நூற்றுக்கு 8 வீதத்தால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.