fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவிற்கு வெளியில் கொவிட் 19 நோயாளிகள் அதிகமுள்ள நாடாக தென் கொரியா

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 14:27

சீனாவிற்கு வெளியில் அதிகளவில் கொவிட் 19 நோயாளிகள் அதிகமுள்ள நாடாக தென் கொரியா இனங்காணப்பட்டுள்ளது. இங்கு 863 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் தென்கொரியாவில் புதிதாக 161 பேர் கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது தென்கொரியாவில் சந்தைகள் மற்றும் கடைத்தொகுதிகள் காணப்படும் பகுதிகளில் புகை விசிரப்படுகின்றது. ஜப்பான் கப்பலிலுள்ள தென்கொரிய மக்களை வெளியேற்றுவதற்காக அந்நாட்டு ஜனாதிபதி விமானங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கப்பலில் தென்கொரியாவை சேர்ந்த 9 பயணிகளும்ஊழியர்கள் ஐவரும் உள்ளனர்.

ஐரோப்பாவை பொருத்தவரையில் இத்தாலியிலேயே 152 கொவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நாட்டில் மூவர் வைரஸ் காரணமாக மரணமடைந்துள்ளனர். இவ்வைரஸ் தாக்கத்தினால் ஏராளமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வெனிஸ் நகரில் ஏராளமான களியாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானில்நேற்றைய தினம் 15 பேர் இனங்காணப்பட்டனர். இங்குமொத்தம் 43 நோயளிகள் காணப்படுகின்றனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெஹ்ரான் உள்ளிட்ட சில நகரங்களில் பாடசாலைகள் நாளை மூடப்படவுள்ளன.

இதேவேளை ஈரானுக்குஅருகிலுள்ள எல்லை பகுதிகளை மூடுவதற்கும் விமான பயணங்களை நிறுத்துவதற்கும் அயல்நாடுகள் சில நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வைரஸ் தாக்குதலினால் சீனாவின் வூஹான் மாகாண வைத்தியசாலையொன்றில் சேவையாற்றிய 29 வயதுடைய வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வைரஸ் தாக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக மீள்வதற்காக பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறவிருந்த அவரது திருமணமும் ஒத்திவைக்கப்பட்டது. சீனாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சுகமடைந்து வெளியேறியிருப்பதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் 77 ஆயிரத்து 150 பேர் இவ்வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 500 பேர் மரணமடைந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க