fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காசா மற்றும் சிரியாவிலுள்ள பலஸ்தின ஆயுத குழுக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானத்தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 14:19

காசா மற்றும் சிரியாவிலுள்ள பலஸ்தின ஆயுத குழுக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளது. காசா எல்லை மற்றும் சிரியாவின் டமஸ்கஸ் நகரங்களில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மீது சிரியா நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விமானத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காசா எல்லை மற்றும் சிரியாவிலுள்ள இஸ்லாமிக் ஜிஹாட் ஆயுத குழுவின் தளங்களை அழிக்கும் வகையிலும் படை நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக காசா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 14:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க