fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் சுகாதார அவசர நிலையை பிரகடனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 13:15

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அடுத்து பல நாடுகளிலும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவரகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் புதிதாக கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதனால் குறித்த மூன்று நாடுகளிலும் நோய் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்நாட்டு வர்த்தக துறை பாரிய சரிவுகளை சந்தித்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது முதல் வர்த்தக விநியோக பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சீனா ஜனாதிபதி ஷீ ஜின்பின் அந்நாட்டில் சுகாதார அவசர நிலையை பிரகடணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க