fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹம்பாந்தோட்டையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்புக்கு பஸ் சேவை…

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 12:54

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 10 அதிசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலிருந்து, கட்டுநாயக்க கடவத்தை மற்றும் கொழும்பு கோட்டை வரை குறித்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அதற்கமைய வேலைதிட்டத்தின் முதற்கட்டமாக இன்று நள்ளிரவு முதல் ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு கோட்டை வரை போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த பயணத்திற்கான பிரவேச கட்டணம், 880 ரூபாவாகும். தங்காலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான பிரவேச கட்டணம் 680 ரூபாவாகவும், ஹம்பாந்தோட்டையிலிருந்து கொட்டாவை மாகும்பர வரையான பகுதிக்கு 810 ரூபாவாகவும் பிரவேச கட்டணமாக அறவிடப்படும். இதேவேளை தங்காலையிலிருந்து கொட்டாவை மாக்கும்பர வரையான பகுதிக்கு பிரவேச கட்டணமாக 610 ரூபா பயணிகளிடமிருந்து அறவிடப்படும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க