fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.நா மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 16:54

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழு அங்கு நாளை பயணிக்கவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாளைய தினம் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். இதன்போது 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறுவதற்கான நிலைப்பாடு தொடர்பில் அவர் விளக்கமளிக்கவுள்ளார். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் அமெரிக்காவால் இலங்கையின் இணை அனுசரணையுடன் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குறித்த தீர்மானத்தில் உள்ள விடயங்கள் இரண்டுவருட காலத்திற்குள் அமுல்ப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு இடம்பெற்ற கூட்டத்தொடரின்போது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை அரசாங்கம் கோரியது. அதற்கமைய 34இன் கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கைக்கு மேலும் இருவருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்பின்னர் 2019ம் ஆண்டு இடம்பெற்ற கூட்டத்தொடரின்போது மேலும் இருவருட கால அவகாசத்தை இலங்கை கோரியது. இதற்கமையவே 40 இன் கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேலும் இருவருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த தீர்மானத்தை வாபஸ் பெறவுள்ளதாக நாளைய கூட்டத்தொடரில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 16:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க