fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எவரியவத்த – யகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி : 13 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 14:15

எவரியவத்த – யகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி  : 13 பேர் காயம்

எவரியவத்த – யகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். கெப் ரக வாகனமொன்று, வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்றவர்களை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு நித்திரைக்கலக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது கெப் வாகனத்தில் 16 பேர் பயணித்துள்ளதுடன், அதில் 14 பேர் காயமடைந்த நிலையில், மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 வயோதிப வயதுடைய பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 14:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க