fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் இருந்து இந்தியாவின் சென்னை நகருக்கு நாளாந்த விமான சேவை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 13:19

யாழ்ப்பாணத்திலிருந்து, இந்தியாவின் சென்னை நகருக்கு நாளாந்த விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. இதுவரைக்காலமும் குறிப்பிட்ட சில தினங்களில் மாத்திரமே இந்தியாவுக்கான விமான சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளாந்த விமான சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை விமான சேவைகள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதற்கான நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ் வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிவிக்கும் வகையில் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

குறிப்பிட்ட சில தினங்கள் மாத்திரமே சென்னைக்கான விமான சேவை இடம்பெற்றதால், அதனை நாளாந்த சேவையாக மாற்றுமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய எதிர்வரும் 27ம் திகதி முதல் சென்னைக்கான நாளாந்த விமான சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க