fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவை அடுத்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 14:08

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவுவுதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கிலும் தற்போது வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஈரானில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியிலும் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்கத்தினால் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது. இதனால் இத்தாலி மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வீதிகளில் அநாவசியமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் இத்தாலி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சீன மாணவர்களுக்கு தமது நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான சீன மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகைத்தரவிருந்தபோதும், அதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo