fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பகிடிவதை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 16:13

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பகிடிவதை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்படவுள்ளன. நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்ற கிளிநொச்சி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனால் குற்றச்சாட்டின் உண்மைதன்மை குறித்து ஆராய்வதற்கு துல்லியமான விசாரணைகள் தேவைப்படுகின்றன. இதன்காரணமாக விசாரணைகளை கொழும்பு குற்றப் விசாரணை பிரிவுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் சிலர், முதலாம் ஆண்டு மாணவிகள் சிலருக்கு பகிடிவதை என்ற போர்வையில் பாலியல் ரீதியான தொல்லைகளை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் உயர்கல்வியமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சந்தேகத்திற்கிடமான மாணவர்கள் அனுப்பிய தொலைபேசி உரையாடல்களை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. குறித்த அறிக்கையை நீதிமன்றில் முன்வைத்து, விசாரணைகளை குற்றப்புலானாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யுமாறு பொலிசார் கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 16:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க