fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச்சென்ற நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 15:42

அனுமதிப்பத்திரமின்றி, இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச்சென்ற நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர் ஹட்டன் வெலிஓயா பகுதியிலிருந்து, கம்பளை நோக்கி மாடுகளை கொண்டுசெல்ல முற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது இறைச்சிக்காக எடுத்துச்செல்லப்பட்ட மூன்று மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 15:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க