fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சகல விமான நிறுவனங்களதும் வருமானம் இவ்வருடம் வீழ்ச்சியடையுமென எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 15:40

சகல விமான நிறுவனங்களதும் வருமானம் இவ்வருடம் வீழ்ச்சியடையுமென எச்சரிக்கை

சகல விமான நிறுவனங்களதும் வருமானம் இவ்வருடம் 30 பில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடையுமென உலக விமான சேவை தொழிற்துறை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக குறித்த நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலம் காணப்பட்ட கேள்வி முதற்தடவையாக வீழ்ச்சியை காணுமென சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துக்கமையினால் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. தென்கொரியாவின் டேகு மற்றும் டியோன்க்டோ நகரங்கள் விசேட பராமரிப்பு வலயங்களாக அறிவிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ச்சூன்ங் சைக்கியூன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 15:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க