fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 19:15

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் புதிய கட்சிகளைப் பதிவு செய்வது தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. புதிய கட்சிகளுக்கான சின்னங்கள் குறித்தும் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டார். சின்னத்தை மாற்றுவது குறித்து ஐக்கிய தேசியக்கட்சி தம்மிடம் எந்த தகவலையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்கென பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து ஒருவாரத்திற்குள் மாத்திரமே கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும். இதனால் தற்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஆராயப்படமாட்டாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை புதிததாக கட்சிகளை பதிவுசெய்வதற்கென 150க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கட்சி மற்றும் சி;ன்னங்கள் குறித்து பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 19:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo