fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 17:09

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் குப்பை மேடு ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுநாயக்காவில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் பிரவேசிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி செல்லும் வாகனம் ஜா-எல பயணிகள் இடம் மாறும் இடத்துக்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குப்பை மேடு தீப்பற்றியமையால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 16 மற்றும் 25.8 இற்கு இடைப்பட்ட பகுதி இதற்கு அமைவாக மூடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 17:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க