fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் : நாவலப்பிட்டியில் 12 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 16:35

நாவலப்பிட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பகுதியில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும், இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய

இன்றைய தினம் கம்பளை, புஸ்ஸல்லா, குருந்துவத்தை, கலஹா, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் நிலையங்களிலுள்ள 150க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே 12 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 16:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க