முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய பணிப்புரையை சவாலுக்குட்படுத்தி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையடுத்தே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது.
உரிய முறைக்கு அமைய மஜிஸ்திரேட் ஒருவரினால் பிறப்பிக்கப்படுகின்ற உத்தரவுக்கு வெளியே மனுதாரரை கைது செய்ய முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இம்மனு மீதான விசாரணை மார்ச் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/02/gihan-pilapitiya.jpg”]