fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்விச் சுற்றுலா பயணம் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறித்து விசாரணைகள்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 13:06

கல்விச்சுற்றுலா சென்று மதவாச்சி கோமரன்கடவல வாவியில் நீராடச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 3 மாணவர்கள் இதன் போது மதவாச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹாலிஎல விஞ்ஞான கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக இம்முறை திருமலை பகுதியை தேர்ந்தெடுத்திருந்தனர். இச்சுற்றுலாவை தொடர்ந்து இவர்கள் மதவாச்சி கோமரன்கடவல வாவியில் நீராடச் சென்றுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் நீராடிக் கொண்டிருந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களது உயிரை காப்பாற்ற மற்றைய மாணவர்களால் முடியாதுபோய்விட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஏனைய மாணவர்களும் நீரில் அடித்துச்செல்லப்பட இருந்த போதிலும் அவர்கள் காப்பற்றப்பட்டனர். ஹாலிஎல விஞ்ஞான கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கின்ற மாணவர்களே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் அட்டாம்பிட்டிய, எல்ல, கலவுட. ஹிங்குருகமுவ ஆகிய பகுதிகளை வசிpப்பிடமாக கொண்டவர்கள். பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் மாணவர்களுக்கு கல்வியை போதித்த போதிலும் இது துரதிஷ்டவசமான சம்பவம் என இக்கல்லூரியின் ஏனைய மாணவர்களது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க