சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது
Related Articles
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தாார்.