நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இயக்குநர் ஷங்கரும் காயமடைந்துள்ளதாக தகவல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இதில் இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதன்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாகியுள்ளனர்.