fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 13:16

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிசார் சந்தேக நபர்களை கைதுசெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலைக்கு அருகில் ரகசியமான முறையில் மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த நபர்கள் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா கலந்த மூக்குத் தூள் போத்தல்கள் உட்பட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க