fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் 12 கோடிக்கும் அதிகமானோர் பலியாகும் ஆபத்து

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 11:56

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் 12 கோடிக்கும் மேற்பட்டோர் பலியாகும் ஆபத்து உள்ளதாக ஜெர்மனி ஆய்வொன்று தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் நடத்தப்படுகிற ஒரு பயங்கரவாத தாக்குதல்கூட இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இந்நிலையில் இரு நாடுகள் இடையே போர் ஏற்பட்டால் அதில் 15 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரையில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம்.

இதனால் 3 கோடியே 60 லட்சம் டன் வரையில் கருப்பு கார்பன் புகை வெளியாகும். இதனையடுத்து சூரிய ஒளியின் அளவு 20 முதல் 35 சதவீதம் குறையும். நிலத்தில் பயிர்கள் உற்பத்தி திறன் 15 முதல் 30 சதவீதம் பாதிக்கும். கடல் உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறைவடையுமென ஜேர்மனிய ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 11:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க