தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று
Related Articles
தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 693 பேருக்கு உப தபால் அதிபர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. மேலும் 300 தபால் நிலைய அதிபர்கள் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்படவுள்ளனர்.
இதேவேளை தபால் திணைக்களத்தை வருமானம் ஈட்டும் திணைக்களமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.