fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று விசேட கலந்துரையாடல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 13:06

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்கள் புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் ஆராய்வதே இதன் நோக்கமாகும்.

தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆராயவுள்ளனர். இதேவேளை புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய 143 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணிகள் நேற்றுமுன்தினம் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை கிடைத்துள்ள விண்ணங்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க