fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தாக்கம் தொடர்பில் சீனா வழங்கிய அறிக்கை ஆய்வுக்கு : உலக சுகாதார அமைப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 16:20

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் சீனா வழங்கிய அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கமைய நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் இதனை உரிய முறையில் அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. 70ஆயிரத்து 548 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் வைத்திய சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ள நபர்களின் ரத்து பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, புதிய சிகிச்சை முறையொன்றை கண்டுப்பிடிக்கும் வேலைத்திட்டத்தை சீனா ஆரம்பித்துள்ளது. அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய முறையில் சிகிச்சைகளை வழங்கும் முதற்கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 16:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க