fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 16:01

கடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் அதிகளவான நெல் அறுவடை இடம்பெறும். அதனை கொள்வனவு செய்ய நாம் தயாராகவுள்ளோம். இப்போதைக்கு நெற் கொள்வனவுக்கான பணம் கைவசம் உள்ளது. தேவை ஏற்படின் ஒதுக்கீடுகளிலிருந்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும். இக்காலப்பகுதியில் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான நெற்கொள்வனவு இடம்பெற்றுள்ளது. ஆயிரத்து 700 தொன் நெற் கொள்வனவு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 800 தொன் வீதம் நெற்கொள்வனவும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் 400 தொன் வரையும் நெற்கொள்வனவு இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை நெல் அறுவடை பெரிதாக ஆரம்பமாகவில்லை. எனவே அரசாங்கத்தின் களஞ்சியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்போகத்தில் ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 16:01

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33