fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சவேந்திரவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பூகோல ஒன்றியத்தின் எதிர்ப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 13:16

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டமை எவ்வித அடிப்படையுமற்ற விடயம் என பூகோல இலங்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருதலைபட்சமானதும் கண்மூடித்தனமுமான இத்தீர்மானம் நாட்டின் இறையாண்மையின் உள்விவகார விடயங்களுக்கு தலையீடு செய்வதாகுமென அவ்வொன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஏதேனும் சர்வதேச நாடொன்றின் அதிகாரியொருவருக்கு மனித உரிமை மீறல் அல்லது ஊழல் மோசடிகளுக்கு சம்மந்தப்பட்டவர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாயின் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் ராஜாங்க செயலாளருக்கு அதிகாரம் காணப்படுகின்றது. அந்நபருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க முடியும். விசேடமாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்தல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும். அவர்களுக்கு கிடைத்த நம்பக தன்மையான விடயங்கள் என்ன? அவர்களுக்கு அது எவ்வாறு கிடைத்தது. அது குறித்து அவர்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பது. இது குறித்து அவர்களுக்கு ஆரம்பத்தில் இலங்கையிடம் விணவியிருக்கலாம். உங்கள் நாட்டு இராணுவ தளபதிக்கு எதிராக வீசாவுக்கான தடை விதிக்கப்படும். இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுக்க முன்னர் இலங்கையிடம் இது குறித்த தகவல்களை விணவ முடியும். இவ்வாறு எவ்வித நடவடிக்கைகளும் இன்றி வீசாவுக்கான தடை விதிப்பது குறித்து கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பீ. டெப்லிசும் வெளியுறவு அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பாக கண்டனம் தெரிவித்ததுடன் இது குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறும் அறிவித்தார். அத்துடன் அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளிடமும் அமைச்சர் எதிர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுத்திருந்தார். இவருக்கு எதிராக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட எவ்வித குற்றச்சாட்டுக்களும் காணப்படாமையினால் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டமை குறித்து பல்வேறு தரப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.

 

 

 

 

 

 

 

 

 

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க