fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முள்ளிப்பொத்தானை பகுதியில் பாம்பு தீண்டி நபரொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:22

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், பாம்பு தீண்டி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 49 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முள்ளிப்பொத்தானை பகுதியில், வயலில் வைக்கோல்களை சேகரித்துக்கொண்டிருந்த நிலையில், அவரை பாம்பு தீண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது கணவரால் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க