fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நோர்வூட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 வீடுகள் தீக்கரை..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:17

ஹெட்டன், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டப்பகுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தால், 7 வீடுகள் தீக்கரையாகியுள்ளன. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் நேற்றிரவு 7 மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ பரவி 3 மணித்தியாலங்களின் பின்னர் நோர்வூட் பொலிசார், ஹெட்டன் – டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவத்தில் 7 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், வீட்டிலிருந்த பெருமதியான சொத்துக்களும் தீக்கரையாகியுள்ளன. பாதிக்கப்பட்ட 40 பேர், தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், தோட்ட வைத்தியசாலையிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் மற்றும் நோர்வூட் பிரதேசசபை என்பன வழங்கிவருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் நோர்வூட் பொலிசார் ஹெட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவினரின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க