fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பகிடிவதையுடன் தொடர்புடைய தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:21

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கெதிரான பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் தகவல்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிசார் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதற்கமையவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை எனும் பெயரில், பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சிரேஷ்ட மாணவர்கள் தொலைபேசியூடாக பாலியல் ரீதியான தொல்லைகளை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு பிரிவுகளினூடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவர்களின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்துள்ளது. அண்மையில் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மாணவர்களில் ஒருவரது வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு முறையிட்டனர். எனினும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித்தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லையென யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க