fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றம் கலைக்கப்படும் தினம் நாளை அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:06

பாராளுமன்றத்தை கலைக்கப்படும் தினம், நாளை அறிவிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்தநாள் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ம் திருத்தச்சட்டத்திற்கமைய பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் கலைக்க முடியும்.

அதற்கமைய அடுத்த மாதம் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும். அதற்கமைய நாளைய தினம் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில், பாராளுமன்றம் கலைக்கப்படும் சரியான திகதி அறிவிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இறுதி பாராளுமன்ற அமர்வு நாளை முதல், எதிர்வரும் 20 ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான தடயவியல் ஆய்வறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. 20 ம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விவகாரம் தொடர்பான விவாதம் இடம்பெறும். அத்துடன் குறைநிரப்பு பிரேரணையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க