fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொடர்பான அமெரிக்க பயண தடைக்கு அரசாங்கம் எதிர்ப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 18:37

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும் தீர்மானம் இலங்கை அமெரிக்காவுக்கு இடையிலான தொடர்புகளில் பாதிப்பை ஏற்படுத்துமென வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி ஒருவரால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி தொடர்பில் வெளிநாடொன்று முறையற்ற வகையில் தீர்மானம் எடுப்பது, வருத்தத்திற்குரிய விடயமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அமெரிக்க தூதுவர் எலைனா பி டெப்லிட்டீஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சரின் அழைப்புக்கு அமைய அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தால் இராணுவ தளபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 18:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க