fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு பாரம்பரிய சித்த வைத்தியமுறை..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 18:49

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாரம்பரிய சித்த முறைகளை கையாண்டு வருதாக சீன தெரிவித்துள்ளது. சுமார் 3 ஆயிரம் வருடங்கள் பழமையான பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மீது சீன மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதற்கமைய சீன மருத்துவர்கள் 2 ஆயிரத்து 200 பேர் ஹூபேய் மாகாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு பாரம்பரிய சிகிச்சை முறை வழங்கப்படுகிறது. குறித்த முயற்சி பலனளித்துள்ளதாகவும் நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் குறைவடைந்து வருவதாகவும் ஹூபேய் மாகாண சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் வைஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 18:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க