துரிதமாக தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் தெரிவிப்பு
Related Articles
துரிதமாக தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது சிறந்ததெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கம்பளை பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை துரிதகதியில் கலைப்பதே தமது விருப்பமெனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சி தற்போது பிளவடைந்துள்ள நிலையில் அவர்களால் சரியான தீர்மானமொன்றை எட்டமுடியாதுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற முடியுமென்ற நிலைப்பாட்டையே சஜித் பிரேமதாச வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.