துப்பாக்கியுடன் வன ஜீவராசிகள் அதிகாரியொருவர் கைது
Related Articles
துப்பாக்கியுடன் வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் ஹம்பாந்தோட்டை – புத்தளம் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு இணைவாக சேவையாற்றிய அதிகாரியென தெரியவந்துள்ளது. அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி, ரவைகள் உள்ளிட்ட சில உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வன பாதுகாப்பு திணைக்கள தலைமையக அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். 30 வயதான குறித்த அதிகாரி ஹம்பாந்தோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.