fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியுறவு அமைச்சகத்திற்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 13:01

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பி டெப்லிட்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கிடையில் வெளிவிவகார அமைச்சில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறுகிறது. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் விடுக்கப்பட்டுள்ள பயணத்தடைக்கான காரணங்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலுள்ள தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவினால் இவ்வாறான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் இதற்கு ஆட்சேபனை வெளியிட்டுள்ளது.

அதனால் இராணுவ தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைவாகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க