fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஜித் அணிக்கு ரணில் அணி சிவப்பு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:41

கட்சியின் யாப்பை மீறி சென்று பல கூட்டணிகளில் பதவிகள் மற்றும் அங்கத்துவம் பெறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஸூமாரசிங்க தெரிவித்தார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கூட இழக்க வேண்டி ஏற்படுமென சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தலைமைத்துவ நெருக்கடி தீர்வடைந்து இலட்சணை பிரச்சினைக்கு ஐக்கிய தேசிய கட்சி இன்று முகம் கொடுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தரப்பு யானை சின்னத்திற்கும் சஜித் பிரேமதாச தரப்பு இதய சின்னத்திற்கும் போரிடும் நிலையில் இந்த மோதல் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பாக விசேட கூட்டம் ஒன்று ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் தொகுதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 

 

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க