fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உதயங்க வீரதுங்கவை பெப்ரவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:45

Update : ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பெப்ரவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். இவர் இன்று கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். உதயங்க வீரதுங்க ஓமானில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பினார். பின்னர் குற்ற புலனாய்வு திணைக்களம் இவரை பொறுப்பேற்றது.

மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் பொறுப்பேற்கப்பட்டார். இவர் இன்றைய தினம் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க