fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா நடவடிக்கையில் வெற்றி கொண்ட இலங்கையர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:35

சீனாவின் வூஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் வெற்றிகரமாக தொற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து இன்று தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதேநேரம் சீனாவுக்கு வெளியே கொவிட் 19 வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்து எவருக்கும் வெளியே செல்லவோ பிரவேசிப்பதற்கோ தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான நாடுகள் தமது நாட்டவர்களை வூஹான் நகரில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட 33 பேரை வூஹான் நகரில் இருந்து வெளியேற்ற இலங்கை அரசாங்கமும் உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொண்டது. விசேட பயிற்சி பெற்ற ஸ்ரீ லங்கன் விமானச்சேவை  ஊழியர்கள் கடந்த முதலாம் திகதி இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உயர்ந்தபட்ச வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதிஅதிகாரிகளை பணித்திருந்தார். இதேவேளை அவர்களுக்கான பரிசோதனைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தியத்தலாவையிலிருந்து அவர்கள் அனைவரும் இன்று கொழும்பு திரும்பினர். பின்னர் ஜனாதிபதியையும் சந்தித்தனர். இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இல்லாத போதிலும்இது குறித்து அவதானமாக இருப்பது அவசியம் என மருத்துவ அதிகாரிகள் சஙகத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேநேரம் கொரோனா தொற்றியதில் 1383 பேர் உயிரிழந்துள்ளனர். 63ஆயிரத்து 651 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுள் 6 சுகாதார துறை ஊழியர்களும் அடங்குகின்றனர். நிவாரண பணியில் ஈடுபட்ட 1716 சுகதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. சீனாவுக்கு வெளியே 3 மரணங்கள் மட்டுமே சம்பவித்துள்ளன. ஹொங்கொங், பில்pப்பைன்ஸ் ஜப்பான் ஆகிய நாடுகளிலேயே இம்மரணங்கள் சம்பவித்துள்ளன. 80 வயதை தாண்டி ஜப்பான் பெண் ஒருவர் கொரோனா தொற்றி இறந்துள்ளார். அவருக்கும் சீனாவின் ஹ10_பை மாநிலத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. ஏற்கனவே ஹொங்கொங்கிலும் பிலிப்பைன்ஸிலும் இறந்தவர்கள் ஹூபை மாநிலத்திற்கு சென்று திரும்பியவர்களாவர். ஜப்பானின் யொக்கோஹமாவில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட டயமன் பிரின்ஸஸ் கப்பலில் 3700 பேர் தொடர்ந்தும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.; அதில் பயணிப்போர் அவர்களின் அறைகளுக்கு வரையறுக்க கப்பலின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நோயை கட்டுப்படுத்தும்போது கரிசனை காட்டாமையினால் ஹூபை மாநிலத்தின் 2 அரச உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo