fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 17:55

மத்திய அதிவேக வீதி மற்றும் ஏனைய அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முதல்கட்டம் நிறைவை எட்டியுள்ள மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்து வீதியை அங்குரார்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம ஊடாக குருநாகல் வரையும், குருநாகல் முதல் நம்புள்ளை வரையும் பொத்துஹெர முதல் கலகெதர வரையான வீதி கட்டமைப்பை துரிதகதியில் நிறைவு செய்யவேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். க

டவத்தை முதல் தம்புள்ளை வரையான அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் வாகனங்களுக்கு வடகிழக்கு மற்றும் மேல்மாகாணங்களுக்கு விரைவில் உள்நுழைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும். மக்களுக்கு சிறந்த வசதிகளுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை துரிதப்படுத்துவது பிரதான நோக்கமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இங்கிரிய முதல் ரத்தினபுரி வரையான 76 கிலோமீற்றர் தூரத்திலான வீதியை நிர்மாணித்து தேசிய அதிவேக வீதி கட்டமைப்புடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது அரைவாசி நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு இணைவாக கிராமிய வீதிக்கட்டமைப்பை நவீனமயப்படுத்தப்படவேண்டியது கட்டாயமெனவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். அதற்கு மேலதிகமாக காலி வீதி மற்றும் கடுவலை ஹைலெவல், பிலியந்தல வீதிகளிள் ஊடாக கொழும்பு வரை காணப்படும் வாகன நெரிசல் பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 17:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க