fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 16:07

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலவும் வரட்சியான வானிலையால், மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. எனினும் எக்காரணத்திற்காகவும் மின்துண்டிப்பு இடம்பெறாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணம் , மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழைபெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 16:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க