ஞாயிறு அறநெறி பாடசாலையை கட்டாயமாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அறநெறி பாடசாலையை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் அறநெறி பாடசாலைகளுக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மதத்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு போட்டித்தன்மை மிக்க கல்வி முறைமை காரணமாக மாணவர்களுக்கு சமய கல்வியும், அவர்களது சுதந்திரமும் கிடைப்பதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகளை வைத்தியர் அல்லது பொறியியலாளராக்க வேண்டுமென்ற நோக்கமே உள்ளது. இதனால் மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறான நிலை சிறுவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது சுதந்திரத்தை பறித்துள்ளது. சிறுவர்களுக்கு விளையாடக்கூட சந்தர்ப்பமில்லை. இதனால் தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பான்மை அற்றவர்களாகவே சிறுவர்கள் உள்ளனர். சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் 7 நாட்களும் சிறுவர்கள் மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்பப்படுகின்றனர். குறித்த நிலை மாற்றப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/_maOQXYdIRc”]