fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 15:46

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை துரித கதியில் நிறைவுசெய்ய பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவையான நிதியுதவியும் , தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா தெரிவித்துள்ளார். கண்டி நகரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜப்பான் தூதுவர் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் மத்திய மாகாண ஆளுநர் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பிலிருந்து கலகெதர வரை அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகளை துரித கதியில் நிறைவுசெய்வதற்காக ஜப்பான் தூதுவர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். கொழும்பிலிருந்து கண்டிக்கு விரைவில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்படுமென ஜப்பான் தூதுவர் உறுதியளித்ததாக , மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான பகுதி இம்மாதம் 23ம் திகதி திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 15:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க