fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லை : உலக சுகாதார அமைப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 15:11

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சீனாவுக்குள் கொரோனா வைரஸ் பாரிய வேகத்தில் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சீனாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 121 மரணங்கள் பதிவாகின. இதற்கமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவைத் தவிர்ந்த ஏனைய 24 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 447 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நாடுகளில் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் ஜப்பானில் கனகாவ பிரதேசத்தில் 80 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க