குவைத் நாட்டில் பணிப்பெண்களாக சென்று பல்வேறு இன்னல்களுக்குட்பட்ட 45 பெண்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
கடந்த இரு வருடங்களாக குவைத்தில் வேலைவாய்ப்புக்கென சென்ற பெண்களே இவ்வாறு நாடு திரும்பினர். சம்பளம் கிடைக்காது பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டிருந்த இவர்கள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்கியிருந்துள்ளனர். நாட்டுக்கு வரவழைக்கப்பட்ட இவர்களுக்கு தமது வீடுகளுக்கு செல்வதற்கு தேவையான பஸ் கட்டணங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்பட்டன.