3 தசாப்தங்களாக கொடிய பயங்கரவாத யுத்தத்திற்கு பின்னர் இலங்கை நல்லிணக்கத்தை நோக்கி நகரந்துள்ளதுடன், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதில் புதியதொரு அத்தியாயத்திற்கு வந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ஷெனுக்கா செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்பு கவுன்ஸிலில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக நிவ்யோர்க்கில் உள்ள எமது பிரதிநிதி ஜனக்க பிட்டிகல தெரிவித்துள்ளார்.
3 தசாப்தங்களாக கொடிய பயங்கரவாத யுத்தத்தை தொடர்ந்து நல்லிணக்க பாதையில் பயணித்துவரும் இலங்கை உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதில் பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கையின் இச்செயற்பாடானது இலங்கை அரசாங்கத்தின் நோக்கிற்கு அமைவாக உள்ளதுடன், மனித உரிமை சட்டம் மற்றும் நல்லாட்சி போன்றனவற்றை பிரதிபலித்து பொருளாதார பிரதிலாபங்களை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ஆசியாவின் பழைய ஜனநாயகத்தை கொண்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி 72வது சுதந்திர தின நிகழ்வின் போது மனித உரிமைகளை பாதுகாத்து பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கான உரிமையை மக்களுக்கு பெற்று கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதற்கமைய எவ்வித சவால்களும் இன்றி அனைத்து இலங்கையர்களுக்கும் தாம் விரும்பிய சமயத்தை பின்பற்றுவதற்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பபாகவும் செயற்பட கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் யாப்பின் ஒழுங்குவிதிகள் மற்றும் ஜனநாயக நீரோட்டத்தில் நாட்டு பிரஜைகளின் விருப்பதற்கு ஏற்ப நாட்டின் தேசிய தேவைகளை பாதுகாப்பதற்காக உள்நாட்டை அடிப்படையாக கொண்ட புதிய மற்றும் நடைமுறை ரீதியான தீர்வொன்றை பெற்று கொள்ள இலங்கை அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/JUV1cY7WOHQ”]