fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வானொலி அரச விருது விழாவில் லக்ஹன்ட மற்றும் வசந்தம் FM விசேட விருதுகளை தட்டிக்கொண்டன..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 12:38

வானொலி அரச விருது விழாவில் லக்ஹன்ட மற்றும் வசந்தம் FM விசேட விருதுகளை தட்டிக்கொண்டன..

இம்முறை வானொலி அரச விருது வழங்கும் விழாவில் லக்ஹன்ட மற்றும் வசந்தம் எப்.எம். விசேட விருதுகளை தட்டிக்கொண்டன.

இம்முறை வானொலி அரச விருது வழங்கும் விழா மருதானை எல்பினிஸ்டன் அரங்கில் இடம்பெற்றது. வசந்தம் எப்.எம்.மின் மொஹமட் அஸ்கர் சிறந்த ஆராய்ச்சிபூர்வமான செய்தி அறிக்கைக்கான விருதை தட்டிக்கொண்டதுடன், சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதுக்கென வசந்தம் எப்.எம்.மின் உதயசாந்தி வெலின்டன் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இதேவேளை சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருக்காக கவிதா பாரதி பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லக்ஹன்ட உதவி முகாமையாளர் மயூரி லியனகே இதன்போது சிறந்த வானொலி விசித்திர நிகழ்ச்சிக்கான விருதை பெற்று கொண்டார். ரேக்காவே யுகாந்தய எனும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஞாபகார்த்த நிகழ்த்திக்காகவே இவ்விருது கிடைத்தது. சிறந்த வானொலி கலையக இணைப்பு அறிவிப்பாளராக லக்ஹன்ட வானொலியின் மொனிக்கா சேரசிங்கவுக்கு வானொலி அரச விருது கிடைத்தது. சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக அரச விருது பிரேமசிறி கம்புதவத்த தயாரித்த லக்ஹன்ட வானொலியின் ஹீன்செரய நிகழ்ச்சிக்கு கிடைத்தது.
நிறைவேற்று தொலைதொடர்பாளர் இந்திரசிறி சுரவீர தயாரித்து வழங்கிய ஹெங்கும் வர்ஷாவ சிறந்த இசை நிகழ்ச்சிக்காக பரிதுரைக்கப்பட்டிருந்தார். சிறந்த அறிவிப்பு துறைக்கான அரச விருதுக்கென லக்ஹன்ட அறிவிப்பாளர் வெனுரி கின்னெலிய தயாரித்த நிவ்ஸ் மோர்னிங் நிகழ்ச்சிக்காக பரிந்துரைக்கப்பட்டது. உதம் சத்தரசிங்க புலனாய்வு நிகழ்ச்சிக்காக வானொலி அரச விருதுக்கென பரிந்துரை செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார். பிரதமர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க