fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 : உலக சனத்தொகையில் 60 சதவீதமானோரை தாக்கலாம் என எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 19:26

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் உலக சனத்தொகையில் 60 சதவீதமானோரை இந்த வைரஸ் தொற்றலாம் என ஹொங்கொங் மருத்துவ பிரிவு தலைவர் எச்சரித்துள்ளார். வைரஸ் முழு உலகுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. வைரஸ் தொற்றிய ஒருவர் லண்டனில் இன்று கண்டுபிடிக்கப்பட்டார். இதன் அடிப்படையில் பிரிட்டனில் வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றிய ஒருவர் இந்தோனேஸியாவின் பாலி தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகினற்து. இதனை தொடர்ந்து உலக சுற்றுலா துறைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஹொங்கொங் மற்றும் மெகாவோவில் உள்ள தமது இராஜதந்திரிகளை உடன் அகற்றி அதற்கு பதிலாக வேறு தரப்பினரை நியமிப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் வூஹான் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரையும் அப்பதவியில் இருந்து நீக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மாகாணத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. பல மாகாணங்களில் இருந்து சுகாதார அதிகாரிகள் வூஹான் மாகாணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 3 பில்லியனுக்கும் கூடுதலான தொகையை ஒதுக்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீனாவில் எழுந்துள்ள இந்நெருக்கடி நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதேநேரம் கொவிட் 19 வைரஸ் தொற்றியவர்களுக்கு விரைவில் குணமடைய பிரார்த்தித்து அதி வணக்கத்துக்குரிய பிரன்ஸிஸ் பாப்பண்டவர் விசேட தேவாரதனையொன்றை நடத்தியுள்ளார். வூஹான் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 33 பேர் பரிசோதனைகளின் பின்னர் இவ்வார இறுதியில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனினும் இதுவரை எவருக்கும் வைரஸ்தொற்றியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 19:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க