fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடல்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 16:33

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாடல் தயாரிப்பாளர்களுக்கான உரிமை கொடுப்பனவு பணம் வழங்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய வானொலிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு 20 ரூபாவும், தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு 100 ரூபாவும் வழங்குவதற்கு ஊடக நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதற்கு சகல ஊடக நிறுவன பிரதானிகளுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 16:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க