fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியல் நோக்கங்களுக்காக மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் : அமைச்சர் பந்துல குணவர்தன

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 12:19

பல்வேறு அரசியல் கட்சிகள் தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சமூக வேலைத்திட்டங்கள் தொடர்பான பட்டப்பின்படிப்பு டிப்ளோமா மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் கீழுள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் சமூக வேலைத்திட்டங்கள் தொடர்பான பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பாடநெறியை பல்கலைக்கழகத்துடன் இணைக்குமாறு மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இது தொடர்பில் அமைச்சர் குறித்த பாடநெறியை பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் இங்கு தெரிவித்தார்.

“ஜனாதிபதி அவர்கள் அனைத்து உபவேந்தர்கள், பீடாதிபதிகள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுடனும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் நோக்கங்களுக்காக மாணவர்களை பயன்படுத்துவது தற்போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் எத்தகை அரசியல் நோக்கங்களை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. புதிதாக பல்கலைக்கழத்திற்கு வரும் மாணவர்களை பகிடிவதைக்குள்ளாக்க வேண்டாம். அவ்வாறு செயல்பட்டால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பகிடிவதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதாவது வகுப்பறை புறக்கணிப்புக்களை மேற்கொண்டு தமது நேரங்களை வீணடிக்க வேண்டாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது குறித்து பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். அவ்வாறு பிரச்சினை தீராவிடின் உயர்கல்வி அமைச்சுக்கு சென்று செயலாளருடனோ, அல்லது அங்குள்ள அதிகாரிகளுடனோ கலந்துரையாடுங்கள் அவர் மூலம் பிரச்சினை தீர்க்க முடியாவிடின் என்னிடம் வாருங்கள். எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாக தீர்க்க முடியும்.”

 

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க